Tuesday, December 8, 2009

Vettaikaran - Very Funny!

விஜயை வேட்டையாடிய சன் டிவி

18ஆம் தேதி வேட்டைக்காரனை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். போட்டிக்கு அ‌ஜித், சூர்யா என்று யாருமில்லை. ர‌ஜினி, கமல் படங்களுமில்லை. ஆனாலும் புளி கரைக்கிற மாதி‌ரி ஒரு போட்டியாளர் இருக்கிறார். அது வேற யாரும் இல்ல டைட்டானிக் படத்தின் மூலம் கரன்ஸியையும், ஆஸ்கரையும் அள்ளியவர். அவரது பிரமாண்ட படைப்பு அவதார்.

ஏன் இந்த படம் வந்தா விஜய் படம் ஹிட்டாகாதா என்று கேட்கறீங்க நல்ல கேள்வி. அதற்கு முன் ஒரு சின்ன ஜோக்

நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!”

இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.

சரி இப்ப மேட்டருக்கு வருவோம். சுமார் 1.500 கோடி ரூபாயில் அவதார் தயாராகியிருக்கிறது. உலகை கலக்கிக் கொணடிருக்கும் 2012 படத்தைவிட பல மடங்கு பிரமாண்டம்.. அவதார் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது. வேட்டைக்காரன் வெளியாகும் அதே நாள். 2012 படத்துக்கு ரசிகர்கள் திரண்டதைப் பார்த்து திரையரங்கு உ‌ரிமையாளர்களே மிரண்டு போனார்கள். பல தமிழ்ப் படங்களைவிட இந்த ஹாலிவுட் படம் அதிகம் வசூலித்தது.

கழுகு, குருவி மாதிரி நம்ம காக்கை சொன்ன தகவல் இது 2012 படத்தை விஜய் ரசிகர்கள் நிறைய வந்து பார்த்ததாக செய்தி. எதுக்கு விஜய் ரசிகர்கள் என்று மண்டையை உடைத்துக்க வேண்டாம். இரு விஜய் ரசிகர்கள் பேசிக்கொண்ட டையலாக்...

ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?

மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க!

18ஆம் தேதி வெளியாகும் அவதாருக்கு 2012 படத்தைவிட பல மடங்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. விட்டால் வேட்டைக்காரனையே விழுங்கிவிடும் என்பது விமர்சகர்களின் கருத்து. இப்பவே இதற்கு முன்பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்களாம். ஏன் நம்ம விஜய் படத்துக்கு அப்படி எதுவும் இல்லையா என்று நீங்க கேட்பது என் காதில் விழுது..

விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”

இப்ப வேட்டைகாரன் விளம்பரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சன் டிவி. அதனால் வேட்டைக்காரனுக்கு எக்கசக்க கூட்டம் வரும் என்று பலர் எதிர்ப்பார்க்கிறார்கள். அதனால் வசூல் எக்கசக்கமா இருக்கும் என்று நினைக்கிறது சன் டிவி.

விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்‌ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.

தேனாண்டாள் பிலிம்ஸ் மாதி‌ரி விளம்பரத்தில் பிரமாதப்படுத்தும் விநியோகஸ்தர்கள் கிடைத்தால் வேட்டைக்காரனை அவதார் ஓவர் டேக் செய்தாலும் ஆச்ச‌ரியமில்லை.

இப்ப இன்னொரு நியூஸ் இருக்கு அதனால விஜய் அப்செட்டாம்

படத்தைப் பார்க்க விரும்பிய விஜய், தயாரிப்பாளர் பாலசுப்ரமணியத்திடம் பேசி ஒரு ஷோவுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னாராம். ஆனால், சன் டிவியோ நாங்கள் யாருக்கும் இப்போதைக்கு ஷோ போடுவதாக இல்லை என்று கூறினார்களாம் பாலசுப்ரமணியத்திடம். இதை அப்படியே விஜய்யிடம் ஒப்பித்தார் அவர். வேறு வழியில்லாமல் எஸ்.ஏ. சந்திரசேகரே சன் நிர்வாகத்திடம் பேசினாராம். இல்லைங்க... ரிலீசுக்கு முன்னாடி படத்தைப் போடுற ஐடியா இல்லை. வேணும்னா 18ஆந் தேதிக்கு மேலே தனி ஷோ போடுறதா சொல்லுங்க என்று கறாராகச் சொல்லிட்டார்களாம்.

இந்த பிரச்சனைக்கு பேசாம காங்கிரஸுல சேர்ந்து கோஷ்டி பூசலை சமாளித்திருக்கலாம்.

தீபாவளி, பொங்கல் என ஏதாவது ஒரு விசேஷ நாளில் படத்தை வெளியிட ஆசைப்பட்டார் விஜய். ஆனால் எதிலும் இல்லாமல் டிசம்பர் 18ம் தேதி என அவர்களே நாள் குறித்துவிட்டார்கள். அதற்கடுத்த வாரம் ரிலீஸ் பண்ணியிருந்தால் கூட அது கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாகியிருக்கும். இதற்கும் காரணம் இல்லாமல் இல்ல. இப்ப மன்மோகன் சிங் ஓபாமாவை சந்தித்து பேசியிருக்கார். இந்தியாவின் ராணுவ உதவியை நாடியிருக்கிறார்.

பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.

குருவி செத்துப் போச்சு; வில்லு ஒடைஞ்சு போச்சு. வேட்டைக்காரன் வந்து மட்டும் என்னத்த வெட்டி முறிக்கப் போறான்?


வேட்டைக்காரனுக்கு சரியான போட்டி எது தெரியுமா ? கனகவேல் காக்க தான் :-)

No comments:

Post a Comment